இலங்கையின் கையிருப்பு $5.6 பில்லியனை எட்டியது: ஒரு நேர்மறையான போக்கு

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2024 ஜூன் மாத இறுதியில் $5.6 பில்லியன்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது மே மாதம் 2024இல் $5.41 பில்லியனில் இருந்து அதிகரித்துள்ளது. ஜூன் புள்ளிவிவரங்களின் படி சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்ற்றத்திலிருந்து சுமார் $1.4 பில்லியன் தொகை அடங்குகிறது, இருப்பினும் இத்தொகை சில பயன்பாட்டு கட்டுப்பாட்டுக்களைக் கொண்டுள்ளது.

ஜூன் 2023 இல் $4.4 பில்லியன் கையிருப்புடன் ஒப்பிடும்போது, இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. மேலும், இலங்கை ரூபாயில் இடையிடையே ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும், 2024ல் அமெரிக்க டாலருக்கு எதிராக 6.5% அதிகமாக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து உரையாடலில் இணையுங்கள்! கீழே கருத்துக்களை பகிர்வதன் மூலம் Positive Sri Lanka உடன் இணைந்து உடனடி தகவல்களை தெரிந்து கொண்டு எம்மோடு ஒன்றிணைந்திருங்கள்.


கருத்துகள்

    மேலும் காட்டு

    எங்கள் தளத்தில் சிறந்த இணைய அனுபவத்தை வழங்க, Positive Sri Lanka குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் பயணத்தைத் தொடர்ந்ததும் குக்கீகள் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கருதப்படும். நாங்கள் பயன்படுத்தும் குக்கீ கொள்கையைப் பற்றி மேலும் அறிக இங்கே