நாங்கள் நல்லதில் நம்பிக்கை கொண்ட இலங்கை மக்கள்.நாம் எமது நாட்டின்மீது கொண்டுள்ள நிபந்தனையற்ற அன்புதான் நம்மை அடையாளம் காட்டுவதும், வேறுபடுத்துவதும், ஒன்றிணைப்பதும் ஆகும்.
நாம் எமது அரசியல், இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையாகச் செயற்பட்டால்தான் நாடும் நாட்டு மக்களும் முன்னேற முடியும் என்ற கொள்கைதான் நம்மை வழிநடத்துகிறது.
அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி இலங்கை செழுமைக்கான பாதையில் செல்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஒரு புதிய ஒளிமயமான இலங்கை ஏற்கனவே எம்முன் உதயமாகியுள்ளது! எம்மால் அதைக் காணவும் உணரவும் முடிகிறது!
நமது துயர்மிகு கடந்த காலத்திலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளதால், எம்மக்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் அனைத்து எதிர்மறையானதும் ஊறு விளைவிப்பதுமான விடயங்களைப் புறந்தள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தலைமைத்துவத்தின் ஊடாக வளர்ச்சியை நோக்கி பாதை அமைத்து வருகின்றார். தோற்றுப்போன ஒரு நாட்டை 2 வருட காலத்தில் அவர் ஒரு நம்பிக்கையளிக்கும் உறுதியான நாடாக மாற்றியுள்ளார்.
ஆயினும், நம் கனவு நாட்டில், நமக்குத் தகுதியான நாட்டில் நாம் வாழ இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
அந்நாட்டை நாம் சென்றடைவோம் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்!
ஜனாதிபதியின் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வே ஒளிமயமான இலங்கைக்கான நம்பிக்கையாகும். இந்நாட்டைக் கரைசேர்க்கும் மாலுமியாக ரணில் விக்கிரமசிங்கவே எமக்குத் தேவை.
உறுதியும் செழிப்பும் மிக்க ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் பயணத்தில் Positive Sri Lanka சமூகமாகிய நாம் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கிறோம்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ரணில் விக்கிரமசிங்க அவர்களை வேண்டிக்கொள்வதோடு நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்.
இதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் ஒரு நம்பிக்கையுள்ள இலங்கையராக இருந்தால், எங்களுடன் சேர்ந்து குரல் கொடுங்கள்.
நாட்டுப்பற்றும் துடிப்பும் மிக்க எங்கள் அசைவியக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள்!
எங்கள் சமூகத்தில் சேருவதன் மூலம் எங்கள் நோக்கத்துடன் இணைந்திருங்கள்
எங்கள் தளத்தில் சிறந்த இணைய அனுபவத்தை வழங்க, Positive Sri Lanka குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் பயணத்தைத் தொடர்ந்ததும் குக்கீகள் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கருதப்படும். நாங்கள் பயன்படுத்தும் குக்கீ கொள்கையைப் பற்றி மேலும் அறிக இங்கே